ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் இந்தியாவின் தேசியக் கொடி முறைப்படி ஏற்றப்பட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க புறப்பட்டு சென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.
ரியோ டி ஜெனீரோ நகருக்கு சென்றடைந்த அவர்கள் அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் இன்று தேசிய கீதம் இசைத்து, இந்திய நாட்டின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நாராயணசாமி ராமச்சந்திரன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மிடுக்கான சீருடையில் பங்கேற்று தாய்நாட்டு கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒலிம்பிக் கிராம மேயரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருமுறை பதக்கங்களை வென்ற கூடைப்பந்து விளையாட்டு வீரருமான ஜமெத் ஆர்கெய்னுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் வெள்ளி யானைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட மயில் சிலை ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment