Latest News

கரண்ட் பில்லை இப்படியும் குறைக்கலாம்.. தெரியுமா உங்களுக்கு..?


உலகம் மாசுபடுவதற்கு ஒரு மிகப்பெரும் காரணமாக இருப்பது மின் உற்பத்தி. ஒருபக்கம் சுற்றுச்சூழலை நாம் அழித்துக் கொண்டு வரும் நிலையில், மறுபுறம் மின்சாரத் தேவை ஒவ்வொரும் நாளும் தமிழ்நாட்டிலும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாறுபட்ட நிலையை நாம் முழுமையாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும், இதற்கான முயற்சிகளில் இறங்குவது தற்போது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையிலாவது நாம் சற்று விழித்துக் கொண்டு, தொழில்நுட்பம் மற்றும் பிற முயற்சிகள் மூலம் சரி செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும். இந்த முயற்சிக்கு சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய முடியும். எப்படித் தெரியுமா..? நம்முடைய தினசரி மின்சாரப் பயன்பாட்டை அதிகளவில் குறைப்பதன் மூலம் நட்டின் சுற்றுச்சூழல் மட்டும் அல்லாமல் மின்சாரத்தைச் சேமிக்கும் புதிய வழிகளைக் கண்டறிய வித்திட முடியும். இந்நிலையில் நம் வீட்டில் எப்படி எல்லாம் மின்சாரத்தை எளிமையாகச் சேமிக்க முடியும் என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். இதனால் கரண்ட் பில்லை பாதியாகக் கூட நாம் குறைக்க முடியும்.

நிறுத்துங்கள்... முடிந்த வரை வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள ஏசி, கணினி மற்றும் பிரிண்டர்கள் போன்ற மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும் பொருட்களை உபயோகத்தைச் சரியான முறையில் அல்லது குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.

இயற்கையான வெளிச்சம் அறைகளில் இயற்கையான வெளிச்சம் படுமாறு அமைத்திடுங்கள். உபயோகமில்லாத அறைகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வையுங்கள். ஜன்னல்களை அடிக்கடி திறந்து புதிய காற்று வந்து செல்ல அனுமதியுங்கள்.

பாதுகாப்பை நீங்களே செய்யுங்கள் இதன் மூலம் நீங்கள் சக்தியை 30 சதவிகிதம் வரை சேமிக்க முடியும். சுவர்களில் பாதுகாப்பு பூச்சைப் பூசுவதால் சூரிய சக்தியை நன்கு பயன்படுத்த முடியும். குளிர் காற்றைத் தடுக்கும் பிளாஸ்டிக் உறைகள் கதவிடுக்குகளை மூடும் தடுப்பான்கள் (ஸ்டாப்பர்ஸ்) போன்ற நாமாகவே செய்யக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துங்கள். ஓவர்ஹங்ஸ் மற்றும் ஆனிங்ஸ் போன்ற ஜன்னல் தடுப்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளி புகுவதைத் தடுத்தால் வீடு சூடாகாமல் மின்சாரச் செலவைக் குறைக்கும்.

கதிர்களிலிருந்து பாதுகாக்க நீடித்துழைக்கும் ஜன்னல்கள், திரைச் சீலைகள் மற்றும் ஒளிதடுப்பு பிலிம்கள் ஆகியவை சூரிய ஒளி புகுவதைத் தடுத்து வீட்டுப் பொருட்களை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும்.

மாற்றத்திற்கான நேரம் இது மின்சாரத்தைச் சேமிக்கும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் உங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க பெருமளவில் உதவும். உங்களுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் இது போன்ற சேமிப்பு முறைகளை ஒவ்வொன்றாகத் தொடங்குங்கள். முதலில் எல்ஈடி பல்புகளை பயன்படுத்துங்கள். பின்னர் பெரிய மின்சார உபகரணங்களில் முயற்சி செய்யுங்கள். இவை மின்சார உபயோகத்தை 75 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தும்.

வீட்டின் தளத்திற்குப் பூச்சு வீட்டில் தளத்திற்கு வெளிப்புறம் பூசப்படும் பூச்சு வீட்டின் உள்ளே வெப்பத்தைக் குறைப்பதுடன் ஏசி உபயோகத்தைக் குறைக்கும்.

நனைக்காமல் சுத்தம் செய்யுங்கள் வீட்டில் உள்ள மறைப்புத் துணிகளை மற்றும் சீலைகளை காற்றில் உலர விடும் வகையில் நீங்களே வடிவமைப்பதன் மூலம் வாஷிங் மெஷினின் உபயோகம் குறையும்.

மூடியிட்டு சமையல் செய்யுங்கள் சமையல் செய்யும்போது பாத்திரங்களை மூடி செய்வதன் மூலம் வெப்பம் வெளியேறாமல் சீக்கிரம் சமைக்க முடியும். இதன் மூலம் எரிசக்தியை அல்லது மின்சார எடுப்பாக இருந்தால் மின் சக்தியை சேமிக்க முடியும்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.