அமெரிக்காவில் மசூதி அருகே இமாமும், அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமி் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ளது அல் பர்கான் ஜேம் மஸ்ஜித் மசூதி. இங்கு இமாமாக இருப்பவர் 55 வயதான மெளலமா அகோன்ஜீ. இவரது உதவியாளராக இருந்து வந்தவர் 66 வயதான தாரா உதீன். இவர்கள் இருவரும் மசூதிக்கு அருகே அடையாளம் தெரியாத ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் பின்னாலிருந்து அந்த நபர் சுட்டுக் கொன்றுள்ளஆர்.
அவர்கள் முஸ்லீம்கள் என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது இன வெறிக் கொலை போலவும் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர். கொலையாளி குறித்த விசாரணை முடுக்க விடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது அந்தப் பகுதியில் 3 கருப்பர் இன வாலிபர்கள் வந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்து சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்
No comments:
Post a Comment