மரணம் இயற்கைதான்... ஆனால் முத்துக்குமாரின் மரணத்தை மனம் ஏற்க முடியவில்லை. அழுது புலம்புகிறது. எத்தனையோ இழப்புகளை சந்தித்து விட்ட போதிலும் முத்துக்குமார் இல்லை என்ற செய்தி மனதை அழுத்திப் பிசைகிறது. செய்தி கேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் அழ வைத்து விட்டார் முத்துக்குமார். அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மொத்தமாக அத்தனை பேரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் முத்துக்குமார். இவரது எழுத்துகளுக்கு எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் ரசித்து மகிழ வைத்தது இவரது எழுத்துக்கள்.
எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எல்லோரிடமும் சிரித்த முகம். கேட்கும் பாடலை உடனே தருவது. வார்த்தைகளில் ஜாலம் காட்டாமல் உயிர்ப்போடு ஒவ்வொரு வரியையும் எழுதுவது.
எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எல்லோரிடமும் சிரித்த முகம். கேட்கும் பாடலை உடனே தருவது. வார்த்தைகளில் ஜாலம் காட்டாமல் உயிர்ப்போடு ஒவ்வொரு வரியையும் எழுதுவது.
சமூகத்திற்காகவும் குரல் கொடுத்த பெரிய மனிதன் சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாமல், சமூக அவலங்களுக்காகவும் தனது தமிழ் மூலம் குரல் கொடுப்பது.. நிச்சயம் முத்துக்குமார் மிகப் பெரிய மனிதன்.
தந்தை - மகளின் தேசிய கீதம் ஒவ்வொரு தந்தை - மகளுக்கும், தேசிய கீதமாகவே மாறிப் போய் விட்டது, இவருக்கு முதல் தேசிய விருதை வாங்கி கொடுத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல்.
மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர் விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்து களித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை.
அநியாயமான மரணம் உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இப்படி எல்லோரையும் பரிதவிக்க விட்டு போய் விட்டார் முத்துக்குமார். திரையுலகுக்கு பேரிழப்பு என்று வெறுமனே சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழுக்கும் இவரது மரணம் மிகப் பெரிய இழப்பு.. காரணம், முத்துக்குமார் நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. நிச்சயம் அநியாயமான மரணம்... !
No comments:
Post a Comment