ராசிபுரம் அருகே டிராக்டர் உபகரணங்களை திருட முயன்றவர்களை கிராம மக்கள், கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாலக்காட்டை சேர்ந்தவர் விவசாயி கணேசன் இவரது தோட்டத்தில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் டிராக்டர் உட்பட விவசாய உபகரணங்களை திருட முயன்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த அலமேலு என்ற பெண் கூச்சலிடவே அங்கு வந்த ஊர்மக்கள் உடனடியாக திருடர்களை கையும் களவுமாக பிடித்து கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நால்வரும் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த செல்வம், ஆரோக்யசாமி, ஞானமணி, குமார் என்பது தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment