Latest News

  

என் அப்பா சேர்த்து கொண்ட பெண்ணுக்கு பிறந்தவர்தான் வைகுண்டராஜன்.. அதிர வைக்கும் குமரேசன்!


சட்டவிரோதமாக தாது மணலை கடத்துவதாக குற்றம்சாட்டப்படும் வைகுண்டராஜன் குறித்த பல அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார் திசையன்விளை குமரேசன். சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய திசையன்விளை குமரேசன் என்பவர் வைகுண்டராஜனின் சட்டவிரோத தாது மணல் தொடர்பான 400 பக்க ஆதாரங்களை வெளியிட்டார். அவர் வைகுண்டராஜனின் சொந்த சகோதரர் எனக் கூறப்பட்டது. ஆனால் தாம் வைகுண்டராஜனின் சகோதரரே இல்லை என திட்டவட்டமாக குமரேசன் மறுத்துள்ளார். இது தொடர்பாக குமரேசன் கூறியதாவது:

தம்பியை வளர்க்க வந்தவர்... எங்க அம்மா சாகும்போது 5 ஆண்குழந்தைகள்... கடைசி ஆண்குழந்தை 10 மாசம் இருக்கும்... அவனை வளர்ப்பதற்காக உவரியில் இருந்து சாதாரண ஏழை குடும்பத்து பெண்ணை எங்க அப்பா அழைத்து வந்தார்.


வலையில் விழ வெச்சு.. அந்த அம்மா வயசான எங்கப்பாவை வலையில் விழ வெச்சு பிறந்தவன்தான் இந்த வைகுண்டராஜன். பிறகு வேறவழியில்லை... கிராமம்ங்கிறதால நாங்க சேர்த்துகிட்டோம்... முறைப்படி கல்யாணம் நடக்கலை... அதுல பிறந்தது 4 பேர்...


சகோதரனே இல்லை... அவன் எப்படி எனக்கு சகோதரனாகிவிட முடியும்? நான் அதை எப்படி ஒத்துக்கிட முடியும்? எப்படி மகாபாரதம் வந்தது அதுதான் இது...

அழகுல மயங்க வெச்சு.... அவ்வளவு சொத்தையும் எங்கப்பாகிட்ட எழுதிவாங்கிட்டாங்க... அவங்க அம்மையின் அழகுல மயங்கவெச்சு எழுதி வாங்கிட்டாங்க... இந்த தாது மணல் நிறுவனத்தின் நிறுவனர் சுப்பையா நாடார்...அவர் இறந்தால் எங்களுக்கு பங்களுக்கு வரும்கிறதால எழுதி வாங்கிட்டாங்க..




No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.