திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மீண்டும் திறக்கப்பட்டன என்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தான் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கை ரத்து செய்தது யார் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி பேசியதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுக்கடைகளை மூடுவது குறித்து சட்டமன்றத்தில் சுமார் 15 நிமிடங்கள் கூச்சல், குழப்பம் நிலவியது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். 1971ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்று ஜெயலலிதா கூறினார்.
திமுகவினர் வெளிநடப்பு மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சுக்கு பதில் தர தி.மு.கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சபாநாயகரை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
துரைமுருகன் குற்றச்சாட்டு வெளிநடப்பிற்கு பின் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், மதுவிலக்கை கொண்டு வந்தது யார் என மக்களுக்கு தெரியும் என்றார். எதிர்கட்சிகளை பேசவிடாமல் சகட்டுமேனிக்கு குற்றசாட்டுகளை கூறுகிறது அ.தி.மு.க என்று கூறினார்.
சாராய சாம்ராஜ்யம் மேலும் பேசிய அவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தான் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மீண்டும் திறக்கப்பட்டதாக கூறினார்.
ஜெயலலிதாவுக்கு சவால் மேலும் பேசிய அவர் மதுவிலக்கு பற்றி ஒரு நாள் முழுவதும் பேச திமுக தயாராக உள்ளதாகவும், எங்களை பேச அனுமதிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் சவால் விடுத்தார்.
அரசு நடத்தும் மதுக்கடைகள் ஆளுங்கட்சியினர் சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ள துரைமுருகன், அரசே மதுக்கடையை ஏற்று நடத்த
No comments:
Post a Comment