ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வழிபாடு செய்ததாக வெளியான செய்திகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதேபோல் அனைத்து தரப்பினரையும் கோவில் நிர்வாகம் கருவறைக்குள் அனுமதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடிவெள்ளிக்கிழமையன்று சிறப்பு பூஜையை நடத்தினார் சசிகலா. இதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார் சசிகலா.
பின்னர் அவரை ஆண்டாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அறங்காவலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரன். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லைதான். ஆனால் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் சென்று சாமி கும்பிட சசிகலாவுக்கு உதவினார் ரவிச்சந்திரன் என்று செய்திகள் வெளியாகியிருப்பதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சசிகலாவை கருவறைக்குள் நுழைய அனுமதித்தவர்கள் பொதுமக்களையும் அதுபோல அனுமதிக்கலாமே... பெரியார் கண்ட புரட்சிகர கனவு ரத்தமின்றி யுத்தமின்றி நிறைவேறிவிடும் அல்லவா? என்கின்றனர் பொதுமக்கள். நடக்கும்?


No comments:
Post a Comment