Latest News

சாய்னா நேவாலுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை- 4 மாதம் விளையாட முடியாது!


இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 4 மாதங்களுக்கு அவர் கட்டாய ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறினார் இந்திய வீராங்கனை சாய்னா நேவால். அவர் வலது முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

முழங்காலில் வீக்கம் ஏற்பட்டதால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார். இந்த நிலையில் சாய்னா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சைக்காக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தற்போது முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த புகைப்படத்தை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சாய்னா வெளியிட்டுள்ளார். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் சாய்னாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னா நேவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.