நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் காரில் கடத்தப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். அங்கு அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டினாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தென்காசி சாலையில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது

சீசன் காலம் என்பதால் குற்றாலத்தில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் மதுப்பான பிரியர்களை திருப்திப்படுத்த குற்றாலத்தில் மெயின் ரோட்டுக்கு வடக்கு புறம் பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடந்துவருவதாகவும், அங்கிருந்து மதுபாட்டிகள் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சுதந்திரத் தினத்தை முன்னிட்டு குற்றாலம் காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸார் பழைய குற்றாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை மறித்து நடத்திய சோதனையில் காரில் 20-அட்டைப் பெட்டிகளில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் 840 மதுபாட்டில்களை நெல்லைக்கு கொண்டு சென்ற ஜெய்சங்கர் என்பவரையம் அவருடன் இருந்த 3-பேரையும் போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, ஜெய்சங்கரைத் தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ஜெய்சங்கரை கைது செய்த போலீஸார் காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment