சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் விஞ்ஞானி சண்முகத்திற்கு அப்துல் கலாம் விருதை வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கினார். விஞ்ஞானி சண்முகத்திற்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இன்றைய விழாவில் விருது பெற்றோரின் விபரம்,
* டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது - சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர் சண்முகம். அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. * துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது - நாமக்கல் மாவட்டம் ஜெயந்தி. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்:-
(1) மகா மகம் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்கான விருதை தஞ்சை மாவட்ட அப்போதைய கலெக்டர் சுப்பையன், போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
(2) கிராமப்புற திடக்கழிவு மேலாண்மை, தூய்மை காவலர் விருது - உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலாளர், இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டது.
(3) இணைய வழி பட்டா மாறுதலில் சாதனை - வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், துறை செயலாளர், ஆணையருக்கு வழங்கப்பட்டது.
4. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தமைக்கான விருது - டாக்டர் ராஜா கண்ணன். அவருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
5. சிறந்த சமூகப் பணியாளர் - எம்.பி.முகமது ரபிக்
6. சிறந்த நிறுவனம்- சிறுமலர் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப்பள்ளி சகோதரி ஜெசிந்தா ரோஸ்லினுக்கு விருது வழங்கப்பட்டது.
7. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாப்ப்பு அளித்தமைக்கான விருது- நாமக்கல் அன்னை ஜெ.கே.கே. சம்பூரணி அம்மாள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
8. சிறந்த தொண்டு நிறுவனம்- முகப்பேர் மேற்கு கலைச்செல்வி கருணாலயம் சமூக நலச்சங்கம்.
9. சிறந்த சமூகப் பணியாளர்- திருநின்றவூர் சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முரளிதரன்.



No comments:
Post a Comment