டெல்லி சர்வதேச விமான நிலைய கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட ரூ25 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வரும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும். பின்னர் பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கடந்த 2 ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் மீண்டும் சோதனை நடத்தியபோது மேலும் 59 கிலோ எடையுள்ள தங்கம் மாயமானதும் தெரியவந்துள்ளது. மொத்தம் சுமா ரூ25 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மாயமானது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தற்போது மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment