சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்தது. நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதில், வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளாக சேலம், கோவை, மைசூரு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரும் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக காவல் துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment