மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று இன்றுடன் (புதன்கிழமை) 100 நாட்கள் ஆவதையொட்டி 'நிலையான ஆட்சி-நிரந்தர வளர்ச்சி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் முற்றிலும் தள்ளுபடி, 16,94,145 விவசாயிகள் பயன். அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.91 கோடி மின் நுகர்வோர்கள் பயன், ஆண்டொன்றுக்கு 1,607 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியம்.
500 மதுபானக்கடைகள் மூடல் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்வு. 78,378 கைத்தறி மின் நுகர்வோர்கள் பயன். விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்வு. 98,712 விசைத்தறி மின்நுகர்வோர்கள் பயன். தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு. டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக்கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு. 500 கடைகள் மூடப்பட்டுள்ளன.
மின்மிகை மாநிலம் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை. தமிழ்நாட்டிற்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அலகு நாட்டிற்கு அர்ப்பணிப்பு. மின் நுகர்வோர் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 4,405 கோடி ரூபாய் நிதி உதவி. டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக 54.65 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 1,37,314 விவசாயிகள் பயன். 64.30 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா சாகுபடி சிறப்பு திட்டம்.
மெட்ரோ ரெயில் விரிவாக்கம் 27,415 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப்பாசனம் 63.36 கோடி ரூபாய் மானியம். சென்னை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம்-1 வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை விரிவாக்கப் பணிகள் 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடக்கம். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,61,886 நபர்களுக்கு 239 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 2,01,533 பெண்களுக்கு 180.98 கோடி ரூபாய் நிதி உதவி. அம்மா திட்ட முகாம் மூலம் 1,99,209 மனுக்களுக்கு உடனடி தீர்வு. 31.12 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள். 17 அமைப்புசாரா நலவாரியங்களில் 69,764 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, 99,703 பயனாளிகளுக்கு 40.45 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
மீனவ குடும்பங்களுக்கு உதவி விடுதலை போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாய் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்வு. மீன்பிடி தடைக்காலத்தில் 1,53,149 மீனவ குடும்பங்களுக்கு 30.63 கோடி ரூபாய் நிவாரண உதவி. 3.8.2016 அன்று அதிகப்பட்சமாக 31.77 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 47,830 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம். இணையவழி சேவைகளை குடிமக்கள் பெறுவதற்கு தமிழக காவல்துறையின் கைப்பேசி செயலி. மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க 890 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்க 182.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
No comments:
Post a Comment