Latest News

எம்பிபிஎஸ் படிக்க மார்க் இருக்கு, ஆனால் வசதி இல்லை... புதுக்கோட்டை மாணவியின் ஏழ்மை நிலை


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழ்மை காரணமாக எம்பிபிஎஸ் படிக்க முடியாமல் மாணவி ஒருவர் தவித்து வருகிறாரர். கல்விக்காக அவரது குடும்பம் கடனில் மூழ்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வல்லத்தரசு (55) வாசுகி தம்பதி. இவர்களுக்கு மேகலா (18) என்ற மகனும் மோகனதாஸ் (13) என்ற மகளும் உள்ளனர். வல்லத்தரசு ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்தே வல்லத்தரசு குடும்பம் நடத்தி வருகிறார்.


10-ம் வகுப்பில் முதலிடம் 

மேகலா 10 வகுப்பில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்தார். பள்ளியில் நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மேகலா, அதில் வந்த உதவித் தொகை அவருக்கு சிறிது ஊக்கம் அளித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேகலா 10-ம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறிப்பிடும்படியாக 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம் என்று நாமக்கல்லில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மேகலாவை அங்கு சேர்த்த அவரது பெற்றோர், அவரது கல்விக்காக ரூ.1,40,000 வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

12-ம் வகுப்பில் 1229 மதிப்பெண் 

இந்நிலையில், நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வில் மேகலா 1129 மதிப்பெண்களுடன் எடுத்து தேர்ச்சி பெற்றார். மேலும் எம்பிபிஎஸ் படிப்பிற்காக கட் ஆப் 196.25 வாங்கி இருந்ததால் கவுன்சலிங்கில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் எம்.பி.பி.எஸ். படிக்க இலவசமாக இடம் கிடைத்திருக்கிறது. மேகலாவிற்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது குறித்து அவரது குடும்பம் மகிழ்சியடைந்த போதிலும், படிப்புச் செலவு தான் சற்று தடங்கலாக இருக்கிறது.

ஏழ்மையில் தவிக்கும் குடும்பம் 

இந்நிலையில், மேகலாவை எப்படியாவது எம்பிபிஎஸ் படிக்க வைத்துவிட வேண்டும் என கருதி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் சேர்த்துவிட்டனர். விடுதி கட்டணம் மற்றும் புத்தகம் வாங்க கட்டணம் என்று பல ஆயிரங்கள் தேவை என்பதால், சிலரிடம் தேவையான பணம் கடன் வாங்கி மேகலாவை கல்லூரியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து, மேலும் படிப்பிற்காக செலுத்த வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஏழ்மையில் சிக்கித் தவிக்கிறது மேகலாவின் குடும்பம்.

மேகலா கூறுவது என்ன? 

நான் மருத்துவராக ஆன பின் என்னைப்போல ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆசை. ஆனால், எனது படிப்பிற்கு வறுமை தடைக்கல்லாக இருக்கிறது. எனது பெற்றோர்கள் முடிந்த அளவிற்கு கடன் வாங்கி விட்டனர். பணம் கிடைத்தால் படிப்பை தொடர்வேன், இல்லை என்றால் பெற்றோர்களுடன் ஆடு மேய்ப்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார் மேகலா. எங்களது அளவுக்கு மீறியே கடன் வாங்கிவிட்டோம். இனியும் யாரிடம் வாங்குவது என தெரியவில்லை. எங்களிடம் இருக்கும் ஆடுகளை விற்றால் கூட அந்த அளவுக்கு பணம் கிடைக்காது என்கின்றனர் மேகலாவின் பெற்றோர்.

அரசு உதவ வேண்டும் 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதிலும், 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால், கல்லூரியில் இடம் கிடைத்தது. எம்பிபிஎஸ் படிக்க வசதி இல்லாதது என்பது வேதனையானது. எனவே உதவி செய்ய நினைப்பவர்கள் உதவ வேண்டும். அரசாங்கம் இந்த மாணவியின் படிப்புச் செலவினை ஏற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.