பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து விவசாயி சீனு தற்கொலை செய்த நிலையில் அதை விபத்து என்று கூறி தமிழக அரசு திசை திருப்பப் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கட்டியுள்ள புல்லூர் தடுப்பணையிலிருந்து சீனு என்ற விவசாயி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கால் தடுமாறி விழுந்து விட்டதாக முதல்வர் ஜெயலலித் கூறியுள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விகாரத்தில் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து ஜெயலலிதா சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும்.
தடுப்பணையில் தவறி விழுந்து தான் விவசாயி சீனு உயிரிழந்ததாக பொய் கூறி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார் ஜெயலலிதா விவசாயி பிரச்சனையை சட்டசபையில் திமுக எழுப்ப உள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment