Latest News

கருணாநிதிக்கு கங்கை நீர், விபூதி, குங்குமம் அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர் !


மத்திய அரசின் கங்கை நீர் விற்பனை செய்யும் திட்டம் குறித்து விமர்சனம் செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தபால் மூலமாக கங்கை நீர் மற்றும் விபூதியை இந்து மக்கள் கட்சியினர் அனுப்பினர். தபால் அலுவலகங்களின் மூலம் கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்கக் கூடாது என்று திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் தி.மு.க. தலைவர் 

கருணாநிதியும் போகிறபோக்கில் விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். இதுதான் மதசார்பற்ற தன்மையா? என்று இந்த திட்டம் குறித்து விமர்சனம் செய்தார்.
தமிழிசை கண்டனம் இஸ்லாதையும் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்லவும் அரசு உதவுவதை நாமியர்கள் புனித யாத்திரை செல்லவும், நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கப்படுவங்கள் எதிர்க்கவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. அது குறித்து விமர்சிக்காத கருணாநிதி இந்து விரோத 

மனப்பான்மையுடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கங்கை நீர் பார்சல் இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இன்று நூதன போராட்டத்தை நடத்தியது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கங்கை நீரை அனுப்பினர். அந்த பார்சலில் 2 பாட்டில்களில் கங்கை நீர் மற்றும் விபூதி, குங்குமம் பிரசாதங்களையும் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் கூறியிருக்கும் கருத்து இன்னும் நீங்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். போலிருக்கிறது. இதுதான் மதசார்பற்ற ஆட்சியா என்று வேதனைப்பட்டுள்ளீர்கள். பாரதநாட்டு மக்கள் நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம், மண்ணெல்லாம் திருநீறு என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள். அந்த நம்பிக்கையை தாங்கள் கிண்டல் செய்ததுபோல் உள்ளது. இந்து கோவில் வருமானங்களை அரசு எடுத்துக் கொண்டு, கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு கோவில்களில் பிரசாத கடைகள் நடத்தி வருமானத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் தாங்கள். தங்களை போன்ற மதசார்பற்ற அரசியல் நாயகனாக மோடி ஆட்சி நடத்த வில்லை. மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு ஒருபுறம் உற்பத்தி, மறுபுறம் விற்பனை. முதலில் பாக்கெட், பின்னர் பாட்டில் என விற்பனை செய்ததுபோல் பாவம் மோடியால் பிழைக்க தெரிய வில்லை.

தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை மதிப்போம் என்றும், மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களோ இந்துக்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்கள் லண்டனில் இருந்து தமிழகத்தை ஆளவேண்டும் என்றும் சொன்னார்கள். எனவே தங்களுக்கு தேம்ஸ் நதி தண்ணீர் இனிக்கும். 

பாரதத்தில் ஓடும் கங்கை தண்ணீர் கசக்கத்தான் செய்யும். தங்கள் வாழ்வுக்கு அருமருந்தாக கங்கைநீர் அமையும். கூடுதல் இணைப்பாக விபூதி, குங்குமம். கங்கை, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது தெய்வ நதி. கங்கை நதி இந்த நாட்டின் ஆன்மா என்று நேரு கூட கூறினார். நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன்தான். இருந்தாலும் என் இறப்புக்கு பிறகு எனது அஸ்தியை கங்கையிலும், தூவ வேண்டும் என்றார். தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் நம்பிக்கை. நல்லெண்ணத்தை தரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.