தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், "கூலிப்படையை ஒழிக்காமல், எதிர்க்கட்சி நிர்வாகிகளைத் தேடித் தேடி கைது செய்கிறது காவல்துறை" என சீறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
கூலிப்படை கலாசாரத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 2-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
சுவாதி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள்! - விசாரணை விவரங்கள்
கொஞ்ச நாட்களாகவே, தன்னை யாரோ பின்தொடர்வதாக சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், போலீஸுல் புகார் செய்யலாமே? என்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால் சுவாதியோ, அந்த அளவுக்கு போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்''. The main evidence in Swathi murder case! - Trial DetailsThe main evidence in Swathi murder case! - Trial Details | சுவாதி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள்! - விசாரணை விவரங்கள் - VIKATAN
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய திருமாவளவன், " தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் கூடும் ரயில்நிலையம், பேருந்து நிலையம், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் கொடூர ஆயுதங்களோடு வந்து கொலை செய்யும் அளவுக்கு கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. இதுபற்றியெல்லாம் தமிழக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. மக்களின் அச்சத்தைப் போக்குவதற்குப் பதில் நேர்மறையாக, 'தமிழ்நாட்டில் கூலிப்படை கலாசாரம் இல்லை, அமைதிப்பூங்காவாக இருக்கிறது' என சட்டமன்றத்தில் பேசுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த சில வாரங்களாக வெளிப்படையாகவே சாதி ஆணவ வன்கொடுமைகள் பரவலாக நடைபெறுகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினரின் ஆற்றல் முழுவதும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் வீணடிக்கப்படுகிறது. சுமார் 70 சதவீதம் காவல்துறையினர், அமைச்சர்களின் பாதுகாப்புக்காக கால்கடுக்க நிற்கின்றனர். காவல்துறையின் மனித சக்தி முழுவதும் ஆளுங்கட்சிக்குப் பயன்படுத்தப்படுவது அநாகரிமானது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலைக்குப் பிறகு, ரவுடிகளைக் கைது செய்வதிலும் பாரபட்சம் காட்டுகின்றனர். பெரிய குற்ற வழக்குகளில் சம்பந்தம் உள்ளவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அரசியல் வழக்குகளில் மட்டும் தொடர்புடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளைக் கைது செய்வதில் ஆர்வம் காட்டுகிறது காவல்துறை.
எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளில், சென்னையில் மட்டும் 13 பேரை கைது செய்திருக்கிறார்கள். விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூரில் உள்ள காந்தி குப்பத்தில் 20-க்கும் மேற்பட்ட வி.சி.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மீது 110 -வது பிரிவின்கீழ் ரௌடி என்ற முத்திரையைக் குத்தி, ரிமாண்ட் செய்துள்ளனர். 110 -வது பிரிவின் கீழ் ரிமாண்ட் செய்ய முடியாது என்பது தெரிந்தும், காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர். சுவாதி என்ற ஐ.டி. நிறுவன ஊழியர் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியைக் கைது செய்ய முடியாமல், எங்கள் மீது வன்மத்தைக் காட்டும் வேலையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகளை ஒடுக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்" என்றார் தகிப்போடு.
திருமாவின் கோரிக்கைக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
-ஆ.விஜயானந்த்
நன்றி : ஆனந்த் விகடன்
No comments:
Post a Comment