தேனி கடமலைக்குண்டு பழங்குடி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வனத்துறையினர் 4 பேர் மீது பத்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கம்பம் வனத்துறையினர் மீது பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீசார் கால தாமதம் செய்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்கள் தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட வனத்துறை சரக அதிகாரி சேகர், வனவர், பிரிக்ஸ் உற்பட நான்கு பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கடமலைக்குண்டு மலைவாழ் மக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
No comments:
Post a Comment