இம்பால்: மணிப்பூர் இம்பால் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் செளதியைச் சேர்ந்த இருவர் உட்பட 3 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இம்பாலில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்குள் திடீரென மோதல் வெடித்தது. இந்த சண்டையில் கைதிகள் ஒருவொருக்கருவர் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் செளதியைச் சேர்ந்த யூசூப், அப்துஸ் சலாம் மற்றும் மணிப்பூரை சேர்ந்த தங்மின்லயன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இந்த மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இறந்த செளதி கைதிகளின் விவரத்தை சிறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment