பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக ஹிமாச்சல பிரதேச முன்னாள் அமைச்சர் ஆஷா குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நில அபகரிப்பு சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் இவரது நியமனமும் காங்கிரஸுக்கு 'பஞ்சாயத்தை' ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மூத்த தலைவர் கமல்நாத் நியமிக்கப்பட்டார்.
ஆனால் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் கமல்நாத்துக்கு நேரடி தொடர்பிருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து தனது பொறுப்பை கமல்நாத் ராஜினாமா செய்தார். இந்நிலையில் கமல்நாத்திற்கு பதிலாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ஆஷா குமாரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சல பிரதேசம் மாநில டல்ஹவுசி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆஷா குமாரி மீதான நில அபகரிப்பு புகார் அண்மையில்தான் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ளார் ஆஷா குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment