எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மீது சென்னை காவல்துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பணமோசடி வழக்கில் 3வது குற்றவாளியாக எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி தலைமறைவான முதல் குற்றவாளியான மதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த மாதம், 29ம் தேதி தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்குழும அதிபரும், ஐ.ஜே.கே. கட்சித் தலைவருமான பாரிவேந்தர் எனும் பச்சமுத்து, தீர்த்துவைக்கவேண்டும் என்றும், காசியில் சமாதி அடையப்போகிறேன் என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார் வேந்தர் மூவிஸ் மதன். அதன்பிறகு அவர் என்னஆனார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. மதனை கொலைசெய்து எரித்துவிட்டனர் என்றும், கடத்திக் கொண்டுபோய் தனி அறையில் விஷ ஊசி போட்டு அடைத்துவைத்துள்ளனர் என்றும் தினமும் பல்வேறு வதந்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக, மதனின் இரு மனைவிகள் மற்றும் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் மருத்துவப் படிப்புகளுக்கு சீட் வாங்கித் தருவதாகக்கூறி பல கோடி ரூபாயை மோசடிசெய்து மதன் தலைமறைவாகிவிட்டார் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்கள், கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தன
200 கோடி மோசடி புகார்கள் மொத்தம் 200 கோடி ரூபாய் வரைக்கும் மோசடி செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மதனுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து மதன் தலைமறைவு பரபரப்பு கட்டத்தை எட்டியது.
தாயார் புகார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக குழுமத்தில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு சீட் வாங்கிக்கொடுக்கும் வேலையில் மதன் ஈடுபட்டதாகவும், அதற்கான மொத்தத் தொகையையும் பச்சமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மதனின் தாயார் தங்கம் தெரிவித்தார்.
ஆட்கொணர்வு மனு மதன்குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லாத காரணத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து காணாமல்போன மதனை இரண்டு வாரங்களுக்குள் போலீசார் கண்டுபிடித்து உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மதன் கண்டுபிடிக்கப்பட்டபின்னரே, இந்தப் பண மோசடிகள்குறித்து விரிவான விசாரணை இருக்கும்.
பாரிவேந்தர் புகார் இதனிடையே எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி மதன், மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாக பாரிவேந்தர் சார்பில் சில தினங்களுக்குமுன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
3 பேர் மீது வழக்கு இதுதொடர்பாக, மதன் மற்றும் அவரது உதவியாளர்களான குணா, சுகில் ஆகிய 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், மதன் மாயமான தேதியில் இருந்து அவர்களும் மாயமான விவகாரம் தெரியவந்திருக்கிறது.
உதவியாளர்களும் மாயம் மதன் உள்ளிட்ட மூவரையும் விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்துவிடுவோம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்நிலையில், மதன் மாயமான தேதியில் இருந்து அவரது உதவியாளர்கள் இருவரும் மாயமானதால் மதன் இறந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம் மீது வழக்கு இதனிடையே எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மீது சென்னை காவல்துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பணமோசடி வழக்கில் 3வது குற்றவாளியாக எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment