சட்டசபை தேர்தலில் 89 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் சட்டசபை குழு தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் தி.மு.க. 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக அரசியலில் சட்டசபையில் எதிர்க்கட்சி அதிக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியினர் வரிசையில் அமருவது இதுதான் முதல் முறை. தி.மு.க. பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார். தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த கூட்டத்திலேயே தி.மு.க. சட்டசபை துணைத்தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டசபை கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment