தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 29) முடிவடைகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாள்களில் சேர்த்து 861 பேரும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 191 பேரும் மனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை வரையில் மொத்தமாக 2 ஆயிரத்து 112 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். நேற்றைய தினம் அதிமுகவைச் சேர்ந்த 233 வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஏப்30ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான மே2ஆம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய் இன்றுதான் கடைசி நாள் என்பதால் பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் எப்போது மாலை ஆகும் என காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில், வேட்பாளர்களை அதற்கு மேல் கட்சிகள் மாற்ற முடியாதல்லவா.
No comments:
Post a Comment