பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்பட 6 பேரை ராஜ்யசபா நியமன எம்.பி.களாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள நியமன எம்.பி.க்களின் எண்ணிக்கை 12. அதில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, மலையாள நடிகரும், பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ் கோபி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எங்கே சித்துவை ஆம் ஆத்மி கட்சி தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்கிவிடுமோ என பாஜக அஞ்சுகிறது. இந்நிலையில் தான் பாஜகவை சேர்ந்த சித்துவின் பெயர் நியமன எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7வது காலி இடத்தை நிறப்ப பாலிவுட் நடிகர் அனுபம் கேரை பரிந்துரைப்பதா அல்லது பத்திரிக்கையாளர் ரஜத் சர்மாவை பரிந்துரைப்பதா என்று ஆலோசனை நடந்து வருகிறதாம். ராஜ்யசபா உறுப்பினர்களான காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், நாடகத் துறை பிரபலம் பி. ஜெயஸ்ரீ, கல்வியாளர் ம்ரினால் மிரி, பொருளாதார நிபுணர் பால்சந்திர முங்கேகர் ஆகியோர் மார்ச் மாதம் 21ம் தேதி ஓய்வு பெற்றனர். முன்னதாக தொழில்துறை நிபுணர் அசோக் கங்குலி மற்றும் பத்திரிக்கையாளர் ஹெச்.கே. துவா கடந்த ஆண்டு ராஜ்சபா உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். எங்கே சித்துவை ஆம் ஆத்மி கட்சி தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்கிவிடுமோ என பாஜக அஞ்சுகிறது. இந்நிலையில் தான் பாஜகவை சேர்ந்த சித்துவின் பெயர் நியமன எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment