சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் சென்னையில் அக்கட்சிக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. சென்னையில் மயிலாப்பூர், ராயபுரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய நான்கு தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளன. இதில் மயிலாப்பூரில் குஷ்பு போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதேபோல பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியும் கிடைத்துள்ளது. அதில் யசோதா போட்டியிடலாம். இதேபோல திருத்தணியும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது. எதிர்பார்த்தது போல செய்யாறு, ஓசூர், தாராபுரம் ஆகியவையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காரைக்குடியும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது. இது போக சிவகங்கை, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், பட்டுக்கோட்டை ஆகியவையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோபிச்செட்டிப்பாளையத்தில் இளங்கோவன் போட்டியிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் கிடைத்துள்ளன


No comments:
Post a Comment