சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெயர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. சட்டசபைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே சந்திக்கிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். 234 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கு விருப்பமனு தாக்கல் செய்த பாமக தொண்டர்களிடம், கடந்த இரு மாதங்களுக்கு முன்பே நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் தங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார். அதனை ஏற்று கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை. எனவே வேறு வழியின்றி சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பாமக வேட்பாளர் பட்டியலை 3 கட்டமாக வெளியிடுவதாக கூறிய டாக்டர் ராமதாஸ் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
1) ஆலங்குடி- டாக்டர் சு.அருள்மணி 2) பொன்னேரி (தனி)- தி.அ.பாண்டியன் 3) செங்கல்பட்டு - கே.ஆறுமுகம் 4) திருவள்ளூர்- வ.பாலயோகி 5) திருப்பூர் தெற்கு - தி.சை.மன்சூர் 6) ஆலந்தூர்- இரா.சீனிவாசன் 7) ஜோலார்பேட்டை - கோ.பொன்னுசாமி 8) திருச்சி கிழக்கு - பா.ஸ்ரீதர் 9) மணச்சநல்லூர்- மா.பிரின்ஸ் 10) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ.கசாலி 11) தியாகராயர்நகர்- வி.வினோத் 12) திரு.வி.க.நகர் (தனி)- தே.வனிதாமணி 13) ஓமலூர்- அ.தமிழரசு 14) சேலம் மேற்கு - இரா.அருள் 15) ஸ்ரீரங்கம்- சு.உமாமகேஸ்வரி 16) மதுராந்தகம் (தனி) - எ.ஆதிகேசவன் 17) பூந்தமல்லி (தனி) - சி.பார்த்தசாரதி 18) திருவிடைமருதூர் (தனி) - எஸ்.ஆர்.மாதவன் 19) அரவக்குறிச்சி - ம.பாஸ்கரன் 20) மன்னார்குடி - சு.பாலப்சுப்பிரமணியன் 21) பெரம்பலூர் (தனி) - மு.சத்தியசீலன் 22) செங்கம் (தனி) - சி.முருகன் 23) ஓசூர் - ப.முனிராஜ் 24) உதகமண்டலம் - மு.பால்ராஜ் 25) மேட்டுப்பாளையம் - கு.மூர்த்தி 26) கவுண்டம்பாளையம் - ஆ.தங்கவேல் பாண்டியன் 27) மொடக்குறிச்சி - செ.நாச்சிமுத்து 28) சேந்தமங்கலம் (தனி-மலைவாழ்) - செ.சுசிலா 29) லால்குடி - இரா.உமாமகேஸ்வரன் 30) பரமக்குடி (தனி) - இரா.தங்கராஜ் 31) திருப்பத்தூர் - பழ.அழகப்பன் 32) மதுரை மத்தி - பி.செல்வம் 33) மதுரை மேற்கு - பா.கிருஷ்ணகுமார் 34) கம்பம் - பொன்.காட்சிக்கண்ணன் 35) பெரியகுளம் (தனி)- இரா.வைகைக்கண்ணன் 36) திண்டுக்கல் - இரா.பரசுராமன் 37) வேடச்சந்தூர் - கே.சி.பழனிச்சாமி 38) விருதுநகர் - பொ.கணேச பெருமாள் 39) அருப்புக்கோட்டை- தீ.அரவிந்த்குமார் 40) திருச்செந்தூர் - த.உஜ்ஜல்சிங் 41) கோவில்பட்டி - ஜி.இராமச்சந்திரன் 42) கடையநல்லூர் - திருமலைக்குமாரசாமி 43) நாங்குநேரி- சா.திருப்பதி 44) திருநெல்வேலி - கணேசன்.கண்ணன் 45) கன்னியாகுமரி - எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அன்புமணி போட்டியிடும் தொகுதி சஸ்பென்ஸ் ஆக உள்ளது.


No comments:
Post a Comment