திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: 1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (மாநிலத் தலைவர்) 2. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ( படத்தில் இருப்பவர்) 3. எம்.எஸ்.ஏ. ஷாஜகான், 4. எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,) 5. எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.,) 6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் ஆகிய 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment