உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சியினர் கடந்த 14–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் பின்பகுதி கால் உடைந்தது.
மசூரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான கணேஷ் ஜோஷி மற்றும் சில தொண்டர்கள் அந்த குதிரையை கம்பால் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து குதிரையை தாக்கியதாக கணேஷ் ஜோஷி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் படேல் நகர் பகுதியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த கணேஷ் ஜோஷி எம்.எல்.ஏ.வை போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கணேஷ் ஜோஷி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கணேஷ் ஜோஷியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment