முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிடப் போகின்றன. இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. புதிய எதிர்பார்ப்பு, புதிய நம்பிக்கையுடன் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து, முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிடப் போகும் இவர்களுக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதே கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் வழக்கமாக இருந்து வந்தது. அங்கு அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு இவர்களும் போட்டியிடுவார்கள். ஊறுகாய் போலத்தான் இவர்களை திமுகவும் சரி, அதிமுகவும் சரி பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு கெளரவமான இடத்தில் இருந்து கொண்டு இவை தேர்தலைச் சந்திககவுள்ளன. மிகவும் சவுகரியமான கூட்டணியில் இந்த முறை இவர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இவர்கள் அதிக தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறார்கள். இதனால் இவர்களது வெற்றி வாய்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1967ல் 13 எம்.எல்.ஏக்கள் 1967ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மொத்தம் 13 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். அதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 பேரும் கிடைத்தனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸிடமிருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.71ல் 8 பேர் மட்டுமே 1971ம் ஆண்டு இது சுருங்கிப் போனது. அதாவது 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அத்தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த முறையும் ஆட்சியைப் பிடித்தது திமுகதான்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபோது 17 அதிமுக ஆட்சியைப் பிடித்தது 1977 தேர்தலில். அத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு மொத்தம் 17 சீட்டுகள் கிடைத்தன. இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்தன.1980ல் 20 1980ம் ஆண்டுதான் இடதுசாரிகளின் பொற்காலமாகும். இந்தத் தேர்தலில்தான் அக்கட்சிகள் மொத்தமாக 20 இடங்களை வென்றன. இடதுசாரிகள் அதிக தொகுதிகளில் ஜெயித்த தேர்தல் இதுதான். இதில மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுககு 9 இடங்களும் கிடைத்தன.1984ல் 6 1984ல் நடந்த தேர்தலில் மீண்டும் சரிந்தன கம்யூனிஸ்ட் கட்சிகள். இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு இடமும், மார்க்சிஸ்ட்டுக்கு 5 இடங்களுமே கிடைத்தன.
1989ல் 18 1989ம் ஆண்டு நட்த சட்டபைத் தேர்தல் ஜெயலலிதாவின் முதல் சட்டசபைத் தேர்தலாகும். அவரது தலைமையில் அதிமுகவின் ஜெ அணியும், ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஜா அணியும் மோதின. திமுக ஆட்சியைப் பிடித்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு இதில் 15 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன1991ல் 2 1991ம் ஆண்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மக்கள் தலா ஒரு இடம் மட்டுமே கொடுத்தனர். அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் முதல் ஆட்சி அமைந்தது.
1996ல் 9 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக அமோக வெற்றி பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடமும் கிடைத்தது.2001 தேர்தலில் 11 2001ல் நடந்த தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். இந்த முறை மார்க்சிஸ்ட்டுக்கு 6 இடங்கள் கிடைத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தன.
2006ல் 15 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. இந்தத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.2011ல் 19 1980ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இடங்களில் இந்த ஆண்டில்தான் இடதுசாரிகள் வென்றனர். அதாவது 19 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 9 இடமும் கிடைத்தன.
2016ல் என்ன கிடைக்கும்? இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே கணிசமான தொகுதிகளில் வென்று வந்துள்ளன - ஓரிரு தேர்தல்களைத் தவிர்த்து. இந்த முறை அவை என்ன பெறப் போகிறன்றன என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது
No comments:
Post a Comment