தமிழகத்தில் தேர்தல் கால மும்முரங்கள் சூடு பிடித்து வருகின்ற நிலையில் திமுக தலைமைக் கழகம் மாவட்ட வாரியாக, படித்த, பதவியில் உள்ளவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு கேள்வி பட்டியலில் உங்கள் பகுதியிலுள்ள மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் மற்றும் ஆசிரியர் போன்றோரிடம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்விகள்...
1.தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் மிகவும் பாதித்த, மாநில அளவிலான பிரச்னைகள் என்ன? 2. மே, 2016ல் திராவிட முன்னேற்ற கழக அரசு அமைந்த மூன்று மாதங்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டிய அடிப்படை பிரச்னைகள் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? 3. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை பெருக்க, உங்கள் மாவட்டத்துக்கு தேவை என்று தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கருதும் முக்கியமான மூன்று அல்லது நான்கு திட்டங்கள் என்ன? 4. இது தவிர தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனை, விமர்சனங்களை வரவேற்கிறோம் ஆகிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இக்கேள்விகளுக்கு பதிலை அவர்களிடம் இருந்து பெற்று அனுப்பி வைக்குமாறு தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment