Latest News

இணையத்தில் ஒரு புதிய முயற்சி: 234 தொகுதிகளிலும் படித்த இளைஞர்களை சுயேட்சை வேட்பாளராக நிறுத்த ஏற்பாடு


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில்..புதிய கட்சிகள் சில உருவாகியிருப்பது ஒருபக்கம்.. கூட்டணி பேச்சுவார்த்தை என்று ஒருபக்கம்..என தேர்களம் சூடு பிடித்து வரும் நிலயில் www.ypolitics.in  என புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி வருகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாச லட்சுமி காந்தன்.

இவர் தொடங்கியுள்ள இணையதளத்தின் மூலம் படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி 234 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர்களை போட்டியிடச் செய்து வெற்றி பெற வைப்பதுதான் நோக்கம் எனவும் கூறுகிறார்.

இதில் குறிப்பிடத் தக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இணையதளம் தொடங்கிய சில நாட்களுக்குள்  4 பெண்கள் உட்பட 101 இளைஞர்கள் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதுதான். மேலும் 6000த்திற்கும் அதிகமானோர் இளைஞர் சக்தி சார்பாக நிற்பவர்களுக்கு வாக்களிப்பதாக பதிவு செய்துள்ளனர்.மேலும் இது பத்தாண்டு உழைப்பு எனவும் நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் மட்டும் இந்த இணைய தளத்தை பாருங்க என்று  சீனிவாச லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.