Latest News

  

ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33%; லோயர் பெர்த்தில் மூத்த குடிமக்களுக்கு 50% இடஒதுக்கீடு


ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் 50% ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பெண்கள், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு, சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

அதில், ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் 50% ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு ரயிலிலும் 120 லோயர் பெர்த்துகள் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் இ கேட்டரிங் சேவை 408 ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். டெல்லி- சென்னை இடையேயான சரக்கு பாதை திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.