Latest News

ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் !


ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்தாண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்தி விடலாம் என்று இருந்த மதுரை மக்களுக்கு இந்த தடை உத்தரவு ஆவேசத்தை தந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாஜக இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இடைக்கால தடை விதித்திருப்பது தென் மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் தினத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.