Latest News

சுரங்கப்பாதை, பேருந்து நிலையம், திரை அரங்குகளில் குண்டுவெடிப்புகளில்... தொடர்ந்து அதிரும் பஞ்சாப்


பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இன்று விமானப் படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது கடந்த 6 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட 2-வது பெரிய தாக்குதலாகும். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பஞ்சாப்பில் தீவிரவாதிகள் நடத்திய சில தாக்குதல்கள்:

2001 மார்ச் 1: இந்தியா- பாக். எல்லையில் குருதாஸ்பூர் மாவட்டத்தில் ஊடுருவுவதற்காக சுரங்கப் பாதையை தீவிரவாதிகள் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2002 ஜனவரி 1: பஞ்சாப்- ஹிமாச்சல பிரதேச எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் 2002 ஜனவரி 31: பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பேருந்தில் குண்டுவெடித்து 2 பேர் கொல்லப்பட்டனர். 2002 மார்ச் 31: லூதியானா அருகே தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து 2 பேர் பலியாகினர். 2006 ஏப்ரல் 28 : ஜலந்தர் பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்து 8 பேர் படுகாயமடைந்தனர். 2007 அக்டோபர் 14: லூதியானா திரை அரங்கம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர். 2015 ஜூலை 27: குருதாஸ்பூர் மாவட்டத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் எஸ்.பி. உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 3 ஊடுருவிய தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2016 ஜனவரி 2 : பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.