Latest News

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு கத்தி போல தொங்குகிறது: வைகோ


திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் தெரிவித்துள்ளார். தஞ்சையில் மதிமுக, செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: கிராமங்கள் முதல், தலைமைச் செயலகம் வரை தங்குதடையின்றி ஊழல் நடைபெறுகிறது. அனைத்து அமைச்சகத்திலும் ஊழல் நடைபெறுகிறது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு கத்தி போல தொங்கிக்கொண்டுள்ளது. குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய கூடும். அது பாரதீரமான அரசியல் மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தும். மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியுடனும் மதிமுக கூட்டணி வைக்கப்போவதில்லை. மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து மதிமுக தேர்தலை சந்திக்கும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.