வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்காக மனிதநேய மக்கள் கட்சி,அதிமுக வுடன் கை கோர்க்கலாம் என்று கடுமையாக முயற்ச்சித்துக்கொண்டிருக்க கூடிய இந்த தருணத்தில் ,
எப்படியும் இரண்டு சீட்டாவது கிடைத்து விடாதா என்றும், அதற்குரிய வேளைகளின் பேச்சுவார்த்தையையும் துரிதமாக முடித்துவிட்டு, அதற்குண்டான களப்பணிகளை தொடங்கி
கல்யாணராமன் விஷயத்திலிருந்து, இன்னும் பல விஷயங்களுக்காக பழையபடி தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார் ஜவாஹிருல்லா .
அதற்காக வேண்டி, தானே புயல் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது மீண்டும் சென்னை, கடலூர், வெள்ள நிவாரண சாதனைக்கு அம்மா தான் முழுக்க முழுக்க காரணம் என்று ஊர் ஊராக சென்று புகழாரம் போன்ற ஒரு நாடகத்தை ஏற்படுத்தி கொண்டிருக்க கூடிய இந்த தருணத்தில்
தி.மு.க விலிருந்து பச்சை கொடி காட்டப்பட்டதின் விளைவாக தமிழக அரசை ஏதாவது ஒரு வகையில் கண்டிக்க வேண்டும், தமிழக அரசுக்கு எதிரான கொந்தளிப்பை இஸ்லாமிய சமுதாயத்தை வைத்து ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளான் ஐடியாவை ஏற்படுத்திக்கொண்ட ம.ம.க, சிறைவாசிகள் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது.
அது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தானே புயல் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை பின்வருமாறு :-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி வரும் பிப்ரவரி 7 அன்று சென்னை மதுரை மற்றும் கோவையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்து.
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரின் விடுதலை தொடர்பாக சென்ற 2015 திசம்பர் 2ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிமான்கள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் அறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பதை ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட தமிழக சிறையில் உள்ள அனைத்து வாழ்நாள் தண்டனை கைதிகளையும் தமிழக அரசு அரசியலமைச் சட்டத்தின் உறுப்பு 161ஐ பயன்படுத்தி பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டையொட்டி விடுதலைச் செய்ய கோரி இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்த செய்தி புதிதல்ல
இந்த மாஸ்டர் பிளான் ம.ம.க வை பொருத்தவரை பழசு தான் கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் நடந்த சட்டசபை தேர்தலுக்காக இதே ம.ம.க, அ.தி.மு.க அரசை எதிர்த்து கையில் எடுத்த சிறைவாசிகள் சம்பந்தமான மாஸ்டர் பிளானை தான் இப்பொழுது மறுபடியும் கையில் எடுத்திருக்கிறது.
வாழ்க ம.ம.க
அழிவில் சிறைவாசிகள்
ஏமாற்றத்தில் மக்கள்
(ஒப்பம்) எம். எச். ஜவாஹிருல்லா



No comments:
Post a Comment