புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மிகு எழுத்தாழும், சத்திய இஸ்லாமிய கருத்துக்களை எட்டுத் திக்கும் எடுத்துரைத்த இஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள் இன்று (21-ரபீவுல் அவ்வல்-1437) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் சென்னையில் வைத்து திடீர் மாரடைப்பால் அவர் வஃபாத்தானார் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் இளயாங்குடியிலுள்ள புதூரில் பிறந்தார். இரண்டு ஆண் மக்களுக்கு தந்தையான அவருக்கு வயது 45.
கடந்த 2 வருடங்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை பிரதிகளை பிறமத சகோதரர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு காரணமாக இருந்தவர். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றிய கருத்துக்களை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர். மதங்களைக் கடந்த அவரது நட்பு வட்டாரம் மகத்தானது. அவரது மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோம். அவர் விட்டுச் சென்ற வீரியமிகு இஸ்லாமிய அழைப்புப் பணியை நாம் தொடர்வோம் - இன்ஷா அல்லாஹ்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் துஆ செய்வோம்
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை, சென்னை ராயப் பேட்டை பள்ளிவாயில் கபுர்ஸ்தானில், அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு : 702772722
No comments:
Post a Comment