சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், திமுகவே வெல்லும் என்றும், கருணாநிதி முதல்வராக அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற பெயரில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி அதன் முடிவை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டனர். இதில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் கருணாநிதி முதல்வராவதற்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
5176 பேரிடம் கருத்துக் கணிப்பு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது.
முதலிடத்தில் திமுக இதில், 35.6 சதவீத ஆதரவுடன் திமுக முதலிடத்திலும், 33.1 சதவீதத்துடன் அதிமுக இரண்டாவது இடத்தையும் வரும் சட்டசபைத் தேர்தலில் பெறும்.கருணாநிதிக்குப் பெரும் ஆதரவு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக வர வேண்டும் என்று 70.99 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வது இடத்தில் ஸ்டாலின் திமுக பொருளாளர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கூறியோர் 69.6 சதவீதம் பேர்.ஜெயலலிதாவுக்கு 3வது இடமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு 65.9 சதவீத வாய்ப்புடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.பிரச்சினைகளை சமாளிப்பதில் பெஸ்ட் திமுக மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதில் திறமையான ஆட்சி என திமுகவுக்கு 33.9 சதவீத ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனிக்கட்சி ஆட்சிதான்...! தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிக்கு 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தோர் 29 சதவீதம் பேர் மட்டுமே.எந்தக் கட்சி ஆட்சி தேவை தமிழகத்தில் எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்? என்ற கேள்விக்கு, திமுகவிற்கு 33.9% மக்களும், அதிமுக விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
3வது இடம் தேமுதிகவுக்கு தேமுதிகவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9%, மதிமுக விற்கு 8.%, மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிமுக ஆட்சி மோசம் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்த கேள்விக்கு நன்று என 32.5% மக்களும், சொல்வதற்கு ஏதும் இல்லை என 25.8% மக்களும், மோசம் என 39.3% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி மோசம் என்றே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக - அதிமுகவுக்கு மாற்று கிடையாது தமிழகத்தில் அதிமுக - திமுகவிற்கு மாற்றாக பிற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் திறமை கிடையாது என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.மாற்றத்தை விரும்பும் 15 சதவீதம் பேர் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களிடையே 15% பேர் திமுக, அதிமுக தவிர்த்து வேறு ஒரு கட்சி வர வேண்டும், தமி்ழகத்தில் மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
3 மதத்திலும் திமுகவுக்கே செல்வாக்கு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என முக்கியமான 3 சமுதாயத்தினர் மத்தியிலும், திமுகதான் செல்வாக்குடன் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி - ஜெயலலிதா தமிழகத்தின் அடுத்த முதல்வராக தகுதி, திறமைகள் உடையவர்கள் யார் என்ற பட்டியலில் முதல் இடத்தில் கருணாநிதியும், இரண்டாவது இடத்தில் ஜெயலலிதாவும், உள்ளனர்.
4வது இடம்தான் விஜயகாந்த்துக்கு 3வது இடத்தில் மு.க.ஸ்டாலின், 4வது இடத்தில் விஜயகாந்த் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், ராமதாஸ், வைகோ, அன்புமணி ஆகியோர் பிடித்துள்ளார்கள்.உங்கள் வாக்கு யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு திமுகவிற்கு 35.6% பேரும், அதிமுக விற்கு 33.1% பேரும், தேமுதிக விற்கு 6% பேரும், மதிமுக விற்கு 3.9% , பா.ம.க 3.9%, பாஜக 3.8%, காங்கிரஸ் 2.% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார் திருநாவுக்கரசு.
No comments:
Post a Comment