சட்டம் அனுமதி அளித்தால் பலாத்கார குற்வாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஆசை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம். அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டெல்லி போலீஸ் தயங்காது.
பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது. பெண்கள் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை விட போலீசார் அதிகமாகவே பெண்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment