நாஞ்சில் சம்பத் விவகாரம் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை. அவர் என்னைப் புகழ்ந்து பேசியது மட்டுமே எனது நினைவில் உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியின்போது கூறிய வார்த்தைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இது அவரது கட்சிப் பதவிக்கும் ஆப்பு வைத்து விட்டது.
இந்த நிலையில் திருச்சிக்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் சம்பத் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வைகோ பதிலளிக்கையில், அவர் என்னை பற்றி புகழ்ந்து பேசிய மட்டுமே என் நினைவில் இருக்கிறது. நாஞ்சில் சம்பத் நீக்கம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. வரும் தேர்தலில் அதிமுக தோற்கும் என்று மட்டும் பதிலளித்தார் வைகோ. ஒரு காலத்தில் வைகோவின் போர் வாள் ஆக மதிமுக மேடை தோறும் முழங்கி வந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவுக்கு அடுத்து மதிமுகவில் அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் அவர். ஆனால் அங்கிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் என்பது நினைவிருக்கலாம். இன்னோவா கார் அன்பளிப்புடன் அதிமுகவில் களம் இறங்கிய அவர் தொடர்ந்து மேடை மேடையாக முழங்கி வந்தார். எந்தப் பேச்சு அவரை உயர்த்தியதோ, இன்று அதே பேச்சே அவரது பதவிக்கு ஆப்பு வைத்து விட்டது சுவாரஸ்யம்தான்.
No comments:
Post a Comment