Latest News

மதுரையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. ஏட்டு உள்பட 12 பேர் கைது


திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் தலைமைக் காவலர் ஒருவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தலைமைக்காவலர், டிரைவர், 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகளைச் சோதனை செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். மேலும், அமைச்சர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.