சம்பந்தப்பட்ட ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு முஹல்லா நிர்வாகம் ஆகியோர் இந்த விசையத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமீரக TIYA வின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். அதிரையில் அதிக பரப்பளவை கொண்ட குளமும் இதுதான். இதன் பரப்பளவு சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் ஆகும். அதிரையில் பெய்துவரும் தொடர் மழையால் குளத்தில் மழை நீர் நிரம்பி ஏரி போல் காட்சியளித்து வருகிறது. இந்த குளத்தில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட சாதி, மதம், இனம் பேதமின்றி தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் நீராடி வருகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் புழக்கம் குளத்தில் இருந்து வரும்.
மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.
தற்போது அதிரையில் பெய்துவரும் தொடர் கன மழையால் பிலால் நகரை ஒட்டி அமைந்துள்ள செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் நிலையில் இருக்கின்றன. மேலும் குளத்தை சுற்றி நீர் கசிவும் இருந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் குளம் உடையும் அபாய கட்டத்தில் இருப்பதால் இந்த பகுதியினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
போர்கால நடவடிக்கையாக இதன் ஆக்கிரமிப்பு வடிகாலை முறையாக தூர் வாரி குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் புகாதுவாறு சீராகக்கொண்டு செல்ல சம்பந்தப்பட்டவர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment