நாங்களே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் பாதிப்பையும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உதவுதற்காக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்று எங்களிடம் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று அரசு ஊழியர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மிகப் பெரிய கன மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. பெரும்பாலான சென்னை மக்கள் இந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளில் உள்ள அத்தனைப் பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வாழ்வாதாரத்தைத் தொலைத்தவர்கள் பலர். இந்த நிலையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அனைவரும் தாராளமாக உதவ வேண்டும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
அரசு ஊழியர்கள் இதை ஏற்று பலரும் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசு ஊழியர்கள் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்குத் தருவதாக அறிவித்தன.
அதிருப்தி ஆனால் இதற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. காரணம், இங்குள்ள அரசு ஊழியர்களும் கூட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய அரசு ஊழியர் குடியிருப்புகள் குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புக்குள் அடையாற்று வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
பெரும் சேதம் தரைத் தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்துள்ளன. அந்தப் பகுதியே தீவு போல காணப்பட்டது. பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளனர் இங்கு வசித்து வரும் அரசு ஊழியர்கள்.
கட்டாயப்படுத்தக் கூடாது இதே நிலைதான் சென்னையில் உள்ள பிற அரசு ஊழியர் குடியிருப்புகளிலும் நிலவியது. இப்படிப்பட்ட நிலையில் தாங்களே பாதிக்கப்பட்ட சூழலில் தங்களிடமிருந்து ஒரு நாள் ஊதியத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக இந்த அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கெடுபிடி கூடாது தங்களுக்கே நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தங்களிடமிருந்து ஒரு நாள் ஊதியத்தைப் பிடிப்பதில் கெடுபிடி காட்டக் கூடாது, கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அரசு ஊழியர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment