விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தொடர்பாக மாவட்டவாரியாக தமிழிசை ஆய்வு நடத்தி வருகிறார். இன்று திருப்பூர் வந்த தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
016ல் தமிழகத்தில் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைப்போம். விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்துப் பேசியது அரசியல் கூட்டணிக்காக அல்ல, இந்த சந்திப்பு மக்கள் நலன் சார்ந்தது. ஆட்சி வேறு, கட்சி வேறு. இவ்வாறு தமிழிசை கூறினார். தன்னை பாஜக தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை என்று விஜயகாந்த் குறைபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழிசை இவ்வாறு நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளது சில ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் இரு தினங்கள் முன்பு சந்தித்துப் பேசினர். அப்போது, பாஜக கூட்டணியின் முதல்வர் பதவி வேட்பாளராக விஜயகாந்த்தை முன்னிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுக கூட்டணிக்கோ, மக்கள் நல கூட்டணிக்கோ விஜயகாந்த் சென்றுவிட கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கையை பாஜக கையிலெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்பேரிலேயே தமிழிசை இன்று தன்னம்பிக்கையோடு பேட்டியளித்திருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment