சென்னையில் இருந்து கொண்டே கொஞ்சம் கூட இந்த மக்களின் வெள்ளத் துயரத்தில் பங்கு பெறாத சுயநலமிகள் வெட்கித் தலைகுணிய வேண்டும் இந்த பெல்ஜியம் நாட்டுக்காரரைப் பார்த்து. இங்கு வந்து இவர் சாக்கடை அடைப்பை எடுத்து விடுகிறார், குப்பை அள்ளுகிறார், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், நம் நகரை சுத்தப்படுத்துகிறார். முகம் முழுக்க முகமூடிகளை அணிந்து கொண்டு கேமராவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டே குப்பை அள்ளிய பலருக்கும் நல்லதொரு பாடமாக இருக்கிறது பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர் வான் கீட் என்ற இந்த நபரின் சுயநலமற்ற சேவை. சென்னையில் பெரு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் முதலில் ஈடுபட்ட பீட்டர் தற்போது பல்வேறு வகையான நிவாரணப் பணிகளில் குறிப்பாக நகரை சுத்தப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்களுக்கே நல்லதொரு உதாரணமாக ஈடுபட்டு வருகிறார்.
பெல்ஜியம் பீட்டர் பெல்ஜியத்தின் லோக்கெரன் என்ற ஊரைச் சேர்ந்தவர் பீட்டர் வான் கீட். கடந்த பல வருடமாக சென்னையில் வசித்து வருகிறார். சிஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
டிரெக்கிங் ஆர்வலர் இவருக்கு மலை ஏற்றப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உண்டு. தனியாக சென்னை டிரெக்கிங் கிளப்பை நிர்மானித்து நடத்ித வருகிறார். இதில் பல ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சுத்தம் என்பது நமக்கு சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் பீட்டர். எங்கு போனாலும் கண்ணில் குப்பை பட்டு விட்டால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை சுத்தம் செய்ய இறங்கி விடுவார். இந்தியா முழுவதும் மலைப் பகுதிகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களையும் இவரது குழுவினர் அகற்று் சேவையைச் செய்து வருகின்றனர்.
சென்னையில் சேவை சமீபத்தில் சென்னையை உலுக்கி எடுத்த கன மழை மற்றும் பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து பீட்டர் குழுவினர் களத்தில் குதித்தனர். பள்ளிக்கரணையில் 100க்கும் மேற்பட்டோரை பீட்டரும், அவரது குழுவினரும் பத்திரமாக மீட்டனர்.
சென்னையில் சேவை சமீபத்தில் சென்னையை உலுக்கி எடுத்த கன மழை மற்றும் பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து பீட்டர் குழுவினர் களத்தில் குதித்தனர். பள்ளிக்கரணையில் 100க்கும் மேற்பட்டோரை பீட்டரும், அவரது குழுவினரும் பத்திரமாக மீட்டனர்.
குப்பைகள் அகற்றம் தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாக சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் எடுத்து விட்டு வருகின்றனர்.
கோட்டூர்புரம் ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்திநகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வசாதாரணமாக சர்வ சாதாரணமாக முகம் சுளிக்காமல் குப்பைகளை வண்டியில் போட்டு அவரே அந்த மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிச் செல்கிறார் பீட்டர். சென்னை மக்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர்.
இளையராஜாவிடம் சான்றிதழ் பீட்டரைப் போலவே சென்னையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவின்போது இளையராஜா சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
நீங்களும் வாங்க இன்று காலையில் கூட கோட்டூர்புரம் சூர்யாநகர் பகுதியில் குப்பைகளை அள்ளி அசத்தியுள்ளார் பீட்டர். அடுத்து அடையாற்று கரையை சரி செய்யப் போகிறார்களாம். நீங்களும் வர்றீங்களா என்று தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார் பீட்டர். பாராட்டுவதோடு நிற்காமல் பீட்டருக்கு கை கொடுக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
No comments:
Post a Comment