ஹரியான மாநிலத்தில் மனநலம் பாதித்த நேபாளப் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கு ரோதக் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒரு பெண் ஹரியாண மாநிலம் ரோக்டெக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோதக் போலீசில் புகார் செய்தனர்.
ஆனால், 4-ந்தேதி ரோதக் அருகில் உள்ள பாகு அக்பர்பூர் கிராமத்தில் ஒரு வயலில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. விசாரணையில் அது அந்த நேபாள பெண் என்பது தெரியவந்தது. அந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கொலைக்கு முன்னதாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பாலியல் சம்பவம் தொடர்பாக ரோதக் நகர் அருகே உள்ள கத்திகேரா கிராமத்தில் பதுங்கி இருந்த 8 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இந்த வழக்கு விசாரணை கடந்த 10 மாதமாக ரோதக் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அதில் மேலும் ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் அவருக்கு சிறார் நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் 10 மாதத்தில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment