சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை முடங்கியது. வரலாறு காணாத அளவில் விடாது விரட்டி விரட்டி பெய்த கனமழைக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. பல அடுக்கு மாடி கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலனோர் வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. பின்னர் மீட்பு பணிக்கு ராணுவமும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு வரவலைக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழைக்கு வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஜெ.ஜெ.நகர், முகப்பேர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், புளியந்தோப்பு, வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வீடுகளை மூழ் கடிக்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் லட்சக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து விட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment