சென்னையில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து நிற்கும் மக்கள் அடுத்த வேளை உணவை யாராவது அளிக்க மாட்டார்களா என்று பசியுடன் காத்திருக்கும் கொடுமையான காட்சியை பார்க்க முடிகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு சாப்பாடு வழங்குகிறது. மேலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் உணவும், தண்ணீர் பாட்டில்களும் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிலர் வெள்ளநீர் புகுந்துள்ள வீடுகளிலேயே உள்ளனர். அவர்கள் வீட்டில் நீர் தேங்கி இருப்பதால் சமைக்க முடியாமல் சாப்பாட்டுக்கு பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வேளையும் யாராவது உணவு, நீர் அளிக்க மாட்டார்களா என்று மொட்டை மாடியிலும், தங்கள் பகுதியின் முக்கிய சந்திப்புகளிலும் வந்து கால் கடுக்க காத்திருக்கிறார்கள். அடுத்த வேளை சாப்பாட்டிற்காக பசியுடன் அவர்கள் காத்திருப்பது பரிதாபமாக உள்ளது. வீடுகளை இழந்த பலர் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டு சாலையோரம் தூங்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்த சூழலில் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
No comments:
Post a Comment