கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 9 பயணிகள் காயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கீரிஷ் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயணிகள் மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்த நகரும் படிக்கட்டுகள் எதிர் திசையில் கீழ்நோக்கி நகரத் தொடங்கியது.
இதனால் நகரும் படிக்கட்டில் இருந்த பயணிகள் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment